எப்படி பதிவுலக நண்பர்கள் இரு ப்லொகுகளை சமாளிக்கிறார்கள்?


சுரேகாவின் ஊக்குவிப்பில் தொடங்கிய இப்பக்கத்தை நிரப்ப எண்ணங்களும்,ஆர்வமும் உள்ள அளவுக்கு நேரம் இல்லை.


ஆனால் குற்ற உணர்வுக்கு பஞ்சமில்லை.
ஏனோ தெரியவில்லை.


நிறைய இசையமைப்பாளர்கள் (ஹிமேஸ் ரேஸ்மய்யா உட்பட‌)தமிழ் திரையுலகில் நுழைந்து ஆக்கிரமிப்பு செய்ய செய்ய என் செவிகளுக்கு இளைய ராஜாவின் இசை இன்னும் அற்புதமாக தொனிக்கிறது.இல்லை என் பிரமையா?


இருக்க முடியாது.செலக்டிவ் அம்னீசியா மாதிரி செலக்டிவ் லிசனிங் செய்ய தோணுகிறது.


http://www.raaja.com/
இங்கே எல்லாத்தகவலும் இ.ராஜாவின் இசையைப் பற்றி கிடைக்கிறது.ஆனால் எங்கே இப்பாடல்களை பதிவு செய்து பெறலாம் என்றுதான் தெரியவில்லை.


80 களில் வெளியான படங்களின் பாடல்கள்தான் இவரின் கிரியேட்டிவிடியின் பொற்காலம் என்பது என் கணிப்பு.


அதற்குப்பின்னர் எல்லாமே அவைகளின் ஒரு மாதிரியான கலவையே!


எனவே 80களின் பாடல்களிலிருந்து முத்தான 5பூபாளம் பாடும் நேரம் ------அகல் விளக்கு

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு

அந்தி மழை பொழிகிறது -ராஜா பார்வை


இளம் பனித் துளிர் விடும் - ஆராதனை


தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் -உல்லாசப் பறவைகள்

நான் கோர்ப்பது
சுரேகா - http://surekaa.blogspot.com/
சக்ர சம்பத் http://www.chakkarapani.com/graffiti/index.php
முத்துலட்சுமி http://sirumuyarchi.blogspot.com/
புதுகைத் தென்றல்http://pudugaithendral.blogspot.com/