எப்படி பதிவுலக நண்பர்கள் இரு ப்லொகுகளை சமாளிக்கிறார்கள்?


சுரேகாவின் ஊக்குவிப்பில் தொடங்கிய இப்பக்கத்தை நிரப்ப எண்ணங்களும்,ஆர்வமும் உள்ள அளவுக்கு நேரம் இல்லை.


ஆனால் குற்ற உணர்வுக்கு பஞ்சமில்லை.
ஏனோ தெரியவில்லை.


நிறைய இசையமைப்பாளர்கள் (ஹிமேஸ் ரேஸ்மய்யா உட்பட‌)தமிழ் திரையுலகில் நுழைந்து ஆக்கிரமிப்பு செய்ய செய்ய என் செவிகளுக்கு இளைய ராஜாவின் இசை இன்னும் அற்புதமாக தொனிக்கிறது.



இல்லை என் பிரமையா?


இருக்க முடியாது.செலக்டிவ் அம்னீசியா மாதிரி செலக்டிவ் லிசனிங் செய்ய தோணுகிறது.


http://www.raaja.com/
இங்கே எல்லாத்தகவலும் இ.ராஜாவின் இசையைப் பற்றி கிடைக்கிறது.ஆனால் எங்கே இப்பாடல்களை பதிவு செய்து பெறலாம் என்றுதான் தெரியவில்லை.


80 களில் வெளியான படங்களின் பாடல்கள்தான் இவரின் கிரியேட்டிவிடியின் பொற்காலம் என்பது என் கணிப்பு.


அதற்குப்பின்னர் எல்லாமே அவைகளின் ஒரு மாதிரியான கலவையே!


எனவே 80களின் பாடல்களிலிருந்து முத்தான 5



பூபாளம் பாடும் நேரம் ------அகல் விளக்கு

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு

அந்தி மழை பொழிகிறது -ராஜா பார்வை


இளம் பனித் துளிர் விடும் - ஆராதனை


தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் -உல்லாசப் பறவைகள்

நான் கோர்ப்பது
சுரேகா - http://surekaa.blogspot.com/
சக்ர சம்பத் http://www.chakkarapani.com/graffiti/index.php
முத்துலட்சுமி http://sirumuyarchi.blogspot.com/
புதுகைத் தென்றல்http://pudugaithendral.blogspot.com/

இன்ட‌ர்னெட்டை கொண்டு நண்ப‌ர்களைத் தேடும் வ‌ழி உள்ளதா?

நான் சார‌தா வித்யாலயா பள்ளியில்(தி. நகர் (மெயின்)) 6 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை ப‌டித்தேன்.
என‌து தோழிக‌ள் நிறைக‌லை,பராச‌க்தி.(இர‌ட்டைய‌ர்க‌ள்)
கல்லூரிக் கால‌ம் வ‌ரை தொட‌ர்பில் இருந்தோம்.

நிறைக‌லை கோவையின் சி.ஐ.டி யில் க‌ணிப்பொறி பொறியிய‌ல் ப‌டித்து பின் அண்ணா ப.க‌ழ‌க‌த்தில் முதுக‌லை ப‌ட்ட‌ம் பெற்றார்.
இப்போது,அமெரிக்காவில் திருமணமாகி குடும்பத்தோடு இருப்பார் என்ப‌து என் கணிப்பு.

ப‌ராச‌க்தி க‌ணித‌ம் இள‌ங்க‌லை ப‌யின்று பின் எம்.சி.ஏ ப‌டித்தார்.

இருவ‌ரும் டி.சி.எஸ்ஸில் ப‌ணியாற்றீன‌ர்.

இவ‌ர்களின் அப்பா அண்ணா ப.க‌ழ‌க‌த்தில் விரிவுரையாளாராக‌ ப‌ணியாற்றினார்.


இருவ‌ரையும் ச‌ந்திக்க.... குறைந்தது தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.

முடியுமா?....
.முடியாத‌து என்று ஒன்றும் இல்லை என எண்ணுகிறேன்.
பாதி வ‌லைப‌திவு ந‌ண்ப‌ர்க‌ள் அமெரிக்காவில் தானே உள்ள‌ன‌ர்.இதைப‌டிக்கும் அனைவ‌ரும் தேடுங‌க‌ள்.
உத‌வினால் என்ன‌ கிடைக்கும்.
..உங்க‌ளுக்கும் ஒரு காணாம‌ல் போன‌ ந‌ண்ப‌ர்
திரும்ப‌ பெற நான் வாழ்த்துவேன்.